Redmi Note 9 with Quad Rear Cameras, Punch-Hole Display Launched in India

ரெட்மி நோட் 9 சியோமியின் சமிபத்திய மலிவு விலை ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாடல் நோட் 9 தொடரில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ரெட்மி நோட் 9 குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது, மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது. ரெட்மி நோட் 8 உடன் ஒப்பிடும்போது இது 25 சதவிகித பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் அவரேஜ்சாக இரண்டு நாள் வரை உபயோகப்படுத்தமுடியும்.

சிறப்பம்சங்கள்:

ரெட்மி நோட் 9 இரண்டு சிம்(நானோ சிம்), ரெட்மி நோட் 9 ஆண்ட்ராய்டு 10-ல் எம்ஐ யுஐ 11 உடன் இயங்குகிறது. 6.53 அங்குல முழு எச்.டி + (1080 x 2340) (பிக்சல்கள்) டாட் டிஸ்ப்ளே 19.5: 9 விகிதத்துடன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 Soc உள்ளது, அதோடு 6 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 ரேம் உள்ளது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு 48 மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் பிரைட் ஜிஎம் 1 முதன்மை சென்சார் மற்றும் எஃப் 1.79 லென்ஸைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் எஃப் 2.2 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், எஃப் 2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எஃப் 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்கு, முன் 13 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

1

ரெட்மி நோட் 9-ல் ஹெட்போன் ஜெக், ப்ளுடூத் 5.0 மற்றும் ஐஆர் ப்ளாஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.ரெட்மி நோட் 9 ப்ரோவில் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக இதில் 22.5W சார்ஜ்சர் பெரிய பேட்டரியான(5020 mAh) நிரப்ப பாக்ஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9, 9W ரிவர்ஸ் சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது.

2

விலை:

ரெட்மி நோட் 9 மூன்று வெரியண்டில் வருகிறது.

4 ஜிபி + 64 மெமரி = 11,999

4 ஜிபி + 128 மெமரி = 13,499

6 ஜிபி + 128 மெமரி = 14,999

ரெட்மி நோட் 9 முதல் விற்பனை வரும் வெள்ளிக்கிழமை(24-ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு அமேசானில் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *